Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 19 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் அதிகமாக காணப்படும் பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (டிசம்பர் 19) புறப்பாடு மற்றும் வருகை என 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி, வாரணாசி செல்லும் 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகை தரும் 3 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும், 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விமானங்கள் இயக்கம் குறித்து பயணிகள் அந்ததந்த நிறுவனங்களிடம் தெளிவாக அறிந்துகொள்ள விமான நிலைய அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b