டிசம்பர் 21 - ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - அமமுக அறிவிப்பு
சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிய
டிசம்பர் 21 ஆம் தேதி நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம்  - அமமுக அறிவிப்பு


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 21.12.2025, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அமைந்துள்ள VPS சரவணா மஹாலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b