அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநாடு வரும் ஜனவரியில் நடத்த திட்டம்
சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச) அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநாடு வரும் ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வரும் இளைஞர்களின் வாக
Admk


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச)

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநாடு வரும் ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

வரும் இளைஞர்களின் வாக்குகளை பெற போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இளைஞர்களின் வாக்குகள் பெருமளவில் பெறுவார் என அரசியல் நிபுணர்கள் கணிக்கும் நிலையில், திமுகவும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர்கள் வாக்குகளை பெற தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து அதிமுகவும் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது.

வரும் ஜனவரியில் தென் மாவட்டத்தில் ( பெரும்பாலும் தென்காசி இன்னும் உறுதியாகவில்லை) அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில மாநாடு நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

அந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது போன்ற விஷயங்களை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ