கலை, அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய மாநாடு!
கோவை, 19 டிசம்பர் (ஹி.ச.) கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ''கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025'' எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு வளாகத்தில் தொடங்க
Covai Conclave 2025


கோவை, 19 டிசம்பர் (ஹி.ச.)

கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 'கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025' எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு வளாகத்தில் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி அரசு தூதர்கள், ராணுவ அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, உலகளாவிய மாற்றங்களை இந்தியா எவ்வாறு தனக்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசிக்கின்றனர்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த தளம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனைப் புள்ளியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வியூகம், பாதுகாப்பு மற்றும் ஆட்சித்திறன் எனும் மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறும் என்று கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN