Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
டில்லி, ஷாங்காய் இடையே ஜனவரி 2 ஆம் தேதி(2026) முதல் தினசரி நேரடி விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் தொடங்குகிறது.
முதலில் வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தச் சேவை, பயணிகளின் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
தினசரி விமான சேவை குறித்து டில்லியில் உள்ள சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
டில்லி, ஷாங்காய் இடையே தினசரி விமான சேவை தொடங்கப்படுவது இரு நாட்டு பயணிகளுக்கும் நல்ல செய்தி.
இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் ஏ330-200 ரக விமானங்கள் இயக்கப்படும். இதில் 18 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும், 245 எகானமி கிளாஸ் இருக்கைகளும் உள்ளன.டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடையும்.
ஷாங்காய்-டில்லி (எம்யு563):
ஷாங்காயிலிருந்து மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:45 மணிக்கு டில்லியை வந்தடையும்.இணைப்பு விமானங்கள் மூலம், இந்தியாவின் 39 நகரங்களில் இருந்து டில்லி வழியாக சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யலாம்.
வரும் காலத்தில் கோல்கட்டா- குன்மிங் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்கவும், மும்பை - ஷாங்காய் இடையே புதிய நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM