பூவிருந்தவல்லியில் மின்சாரப்பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
திருவள்ளூர், 19 டிசம்பர் (ஹி.ச) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை இன
பூவிருந்தவல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்


திருவள்ளூர், 19 டிசம்பர் (ஹி.ச)

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை இன்று (டிசம்பர் 19) திறந்து வைத்து, 214.50 கோடி ரூபாய் மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லியிலிருந்து - அண்ணா சதுக்கம் செல்லும் 25 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ், 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 54 எண் வழித்தடத்தில் 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – தியாகராயநகர் செல்லும் 154 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – செங்குன்றம் செல்லும் 62 எண் வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) செல்லும் 66 P வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – திருவான்மியூர் செல்லும் 49 X வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள்,

பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 101CT வழித்தடத்தில் 20 ஏ.சி பேருந்துகள், பிராட்வேயிலிருந்து – திருமழிசை செல்லும் 101X வழித்தடத்தில் 5 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – திருவள்ளூர் செல்லும் 597A வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து -சுங்குவார்சத்திரம் செல்லும் 578 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள் என 214.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம்ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b