Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 19 டிசம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி,
பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர்
பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் இன்று
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்தை 3 ஆயிரத்து
917 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 இலடசத்து 8628 ஆண் வாக்காளர்களும், 5
லட்சத்தி 95 ஆயிரத்து 153 பெண் வாக்காளர்களும், 136 மூன்றாம் பாலினத்தவரும்
வாக்காளர்களாக உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில்
81 ஆயிரத்து 515 வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், கண்டறிய
முடியாதவர்கள் என கருதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளர்.
மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 6.34 சதவீதம் பேர் வாக்காளர்
பட்டியலில் இருந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது
நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்..
மேலும்,தமிழக அளவில் குறைந்த வாக்காளர்
பெயர் பட்டியலில் நீக்கப்பட்ட அளவில் இரண்டாவது மாவட்டம் தருமபுரி மாவட்டம்
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam