23 -வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது
சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச) சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION இந்தோ சினி அப்ரிஷியேசன் பவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு அரசின் இணைந்து நடத்திய 23 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2025 நிறைவு நாள் நிக
Film


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION இந்தோ சினி அப்ரிஷியேசன் பவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு அரசின் இணைந்து நடத்திய 23 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2025 நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனர் சிறப்பு விருந்தினராக ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

23 -வது திரைப்பட விழா டிசம்பர் 11 தேதி தொடங்கி இன்று வரை 8 நாட்கள் நடைபெற்றது.

51 நாடுகளை சார்ந்த 122 திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் ஒளிபரப்படபட உள்ளது குறிப்பாக ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் திரைப்பட விருதுகள் பெற்ற திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.

மொத்தம் திரையிடப்படும் 122 திரைப்படங்களில் டூரிஸ்ட் பேமிலி , பறந்து போ , மாயக்கூத்து உள்ளிட்ட 25 தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது , மேலும் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பட வாழ்வினை கௌரவிக்கும் வகையில் பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்பட்டது மற்றும் எம் ஜி ஆர் திரைப்படக் கல்லூரியை சார்ந்த மாணவர்களின் ஆறு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2025 நிறைவு நாள் நிகழ்ச்சியில் 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர் உள்ளிட்ட 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் இயக்குனர் ராம், நடிகர் சசிகுமார், மற்றும் பல்வேறு திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ