பனிமூட்டம் காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் பரவலாக மார்கழி மாதம் பனி சற்று அதிகமாக இருப்பது வழக்கம். சென்னையில் கடந்த 16 ஆம் தேதி மார்கழி மாதத்தின் முதல் நாளிலேயே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை மற்ற
பனிமூட்டம் காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் பரவலாக மார்கழி மாதம் பனி சற்று அதிகமாக இருப்பது வழக்கம். சென்னையில் கடந்த 16 ஆம் தேதி மார்கழி மாதத்தின் முதல் நாளிலேயே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வருகின்றது. சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிரவிட்படி கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்றும் (டிசம்பர் 19) கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிக அளவில் நிலவுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b