Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
விஜய்க்கு எம்ஜிஆர் என்ற முகமூடி போட்டு கொண்டு வந்தால் தான் மக்களை சந்திக்க முடியும் என்றால் அவரின் தனித்தன்மை எங்கே போனது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா என யாருடைய முகமூடி போட்டு வந்தாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு போடாது இதுதான் வரலாற்றின் நிதர்சனமான உண்மை என தெரிவித்தார்.
களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது என அதிமுகவை மனதில் வைத்து விஜய் சொல்லி இருந்தால்,
முளைத்து மூணு இலை கூட விடாதவர்கள் அவர்கள். ஆலமரத்து நிழல் அதிமுக. அந்த மரம் தொண்டர்கள் என்ற விழுதால் தாங்கி நிழல் தருகின்ற இயக்கமாக இருக்கிறது. எப்படிப்பட்ட காலத்தை எல்லாம் அதிமுக சந்தித்திருக்கிறது. அரசியல் ஆத்திச்சூடி அறியாதவர்கள் அறிந்து கொள்கின்ற சூழ்நிலை வரும் என தெரிவித்தார்.
அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படாமல் எதிரி கட்சியாக செயல்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,
முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த பழுது பனியன் கிழித்துக்கொண்டு எப்படி வந்தார் முதல்வர் என்று எல்லோருக்கும் தெரியும். பனியன் அட்வர்டைஸ்மென்ட் கொடுப்பது போல் வந்தாரா இல்லையா ?
எதிர்க்கட்சியாக வந்தவர், அவருக்கு அது தான் ஞாபகம் இருக்கும. ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக வளமான தமிழகத்திற்கு ஒரு எதிர்க்கட்சி கடமையை செய்யும் பொழுது, அவர் எதிர் கட்சியாக இருந்தபோது என்ன செய்தார் என்று அவர் எப்படி இருந்தார் என்று தெரியும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ