கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை தாற்காலிக ரத்து
கன்னியாகுமரி, 19 டிசம்பர் (ஹி.ச.) உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி ம
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து


கன்னியாகுமரி, 19 டிசம்பர் (ஹி.ச.)

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

இதை கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.மேலும் சுற்றுலா படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b