Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 19 டிசம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த பாலேப்பள்ளியை சேர்ந்தவர், 25 வயது
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.
இவரது பெற்றோர், ஆடு வளர்க்கும் தொழில் செய்து
வந்தனர். இவர்கள், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, மாலை
தங்கள் வீட்டிற்கு வருவர். அதுவரை அவரது மனநிலை பாதிக்கப்பட்ட மகளை வீட்டில்
தனியாக விட்டு செல்வது வழக்கம்.
கடந்த, 2021 ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஆடுகளை மேய்ச்சல் முடிந்து கூட்டி
வந்த நிலையில், அவரது மனநலம் குன்றிய பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கூலித்
தொழிலாளியான 41 வயதான சேம் ரிபெத், என்பவர் கற்பழித்து தப்ப முயன்றது
தெரிந்தது. அவரை மடக்கி பிடித்த பெண்ணின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர்
போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிந்து அவரை கைது
செய்தனர்.
இவ்வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த, 4 ஆண்டுகளாக
நடந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி லதா தன் தீர்ப்பில்,
குற்றம்சாட்டப்பட்ட
சேம்ரிபெத்துக்கு, கற்பழிப்பு குற்றத்திற்கு ஒரு ஆயுள்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒரு ஆயுள் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.
மேலும், மனநிலை பாதித்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்த வழக்கில், 5 ஆண்டு சிறை
தண்டனையும் விதித்தார்.
இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்,
தவறும் பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும்
உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ரமேஷ் ஆஜரானார்.
Hindusthan Samachar / GOKILA arumugam