Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, ஸ்டெயின் கமலேஷ், நபித் அஸ்லம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற ஶ்ரீதர் ஆகிய மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
மாணவர்கள் இளம் வயதில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு துணை நிற்கும், எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று அமைச்சர் பி.மூர்த்தி வாழ்த்தி பேசினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மேதகு இந்திய ஜனாதிபதியிடமிருந்து பள்ளிக்காக புத்தகங்கள் பெற்றமையைப் பாராட்டி கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வகுப்பறைக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் முகமது இதிரிஸ் முன்னிலை வகித்தார், பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்நபி வரவேற்புரையாற்றினார். வக்ஃபு வாரியக் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது அப்துல்லா, மேலாளர் காதர் முகைதீன், தொழிலதிபர் பாசில், டாக்டர் முஸ்தாக், சம்சுதீன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J