Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 19 டிசம்பர் (H.S.)
தீயசக்தி யார், தூய சக்தி யார் என்பதை மக்கள் வாக்குகள் மூலம் நிரூபிப்பார்கள் என்று தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்படம் நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டில்
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் நடந்தது. கவுன்சிலர் சரவணன்
வரவேற்றார். நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில்
வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வானுார்
சட்டமன்ற தொகுதியில் நடக்கவுள்ள தேர்தலில் திமுக.,வினர் வாக்குச்சாவடி
முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கி பேசினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஈரோடு கூட்டத்தில் திமுக தீய சக்தி என விமர்சித்த விஜய் பேச்சுக்கு பதிலளித்தார்.
தீய சக்தி, தூய சக்தி யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ ஆட்சிகள் நடந்திருந்தாலும், தனி நபர்கள் பயன்பெறும் வகையில் நம்முடைய முதல்வர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆட்சி செய்திருந்தாலும், கலைஞர் ஆட்சி காலத்தில் தான்
தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான கட்டமைப்பு உருவாக்கி, அனைவருக்கும் இலவச கல்வி
வழங்கியதால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. வடமாநிலத்தில் உள்ளவர்கள்
தமிழகத்திற்கு தொழிலாளியாக வருகிறார்கள்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வருகிறார்கள்.
ஆனால் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்று அவர்கள்
உழைப்பில் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது திமுக அரசு தான்.
இதில் யார் தீய சக்தி, துாய சக்தி என்பது மக்களுக்கு தெரியும். தமிழக மக்கள்
திமுக-வை துாய சக்தியாக என்று நினைத்து அதை சட்டமன்ற தேர்தலில் ஓட்டாக
மாற்றுவாரற்கள். கடந்த காலத்தில் பொருளாதரத்தில் வீழ்ச்சி பெற்ற தமிழ்நாடு,
தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி கூறுகிறது. இது தான் துாய சக்தி.
ஒரு கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் 900 ஆயிரம் குடும்பத்திற்கு அரசின் நிதி செல்கிறது. இது தான் துாய சக்தியின் ஆட்சி. கோடி கோடியாய் வருமானம் பார்ப்பவர்களுக்கு ஆயிரம் சாதாரணம். ஆனால் ஏழைகளுக்கு இது பெரிய வாய்ப்பாக உள்ளது. ஏழைகளுக்கு இலவசம் என்பது கோடி ரூபாய்க்கு சமம்.
ஆனால் கோடி கோடியாய் வருமானம் பார்ப்பவர்கள் சரியாக வரி கட்டுவதில்லை. வரி கட்டாதவர்கள் எல்லாம் தீய சக்தி என்று
கூறுகிறார்கள். தீய சக்தி என்று கூறுபவர்கள் கோமாளிகள்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam