Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'சாந்தி'' மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
இந் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'சாந்தி' மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்த மசோதா நிறைவேற ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். செயற்கை நுண்ணறிவுக்கு ஊக்கமளிப்பது முதல் பசுமை உற்பத்திக்கு வழிவகுப்பது வரை, இது நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்குத் தீர்க்கமான உந்துதலை அளிக்கிறது.
இது தனியார் துறைக்கும் நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்!.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM