Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டபடி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் அமளியில் முடிந்தாலும், 3-ம் தேதி முதல் ஆக்கபூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றன.
வந்தே மாதரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி காற்று மாசு, திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
இதிலும் முக்கிய மசோதாவான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதிட்டத்தின் பெயரை “விக்சித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்”) அதாவது விபி-ஜி ராம் ஜி திட்டம் என மாற்றி மக்களவையில் நேற்று மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (19-ம் தேதி ) நிறைவு பெற்றதுடன் மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.
இன்று காலை அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b