கணவனை அடித்து விட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பல்!
ராமநாதபுரம், 19 டிசம்பர் (ஹி.ச.) ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி இருவர், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த சாலை ஓரத்தில் 4 இளைஞர்கள் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். ம
Harassment


ராமநாதபுரம், 19 டிசம்பர் (ஹி.ச.)

ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி இருவர், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையில் நடந்துச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த சாலை ஓரத்தில் 4 இளைஞர்கள் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்கள் நான்கு பேரும், தம்பதியினரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் கடும் அதிர்ச்சியூட்டும் செயலை செய்துள்ளனர்.

கணவன், மனைவியை பின்தொடர்ந்து சென்ற அந்த நான்கு பேரும் திடீரென அந்த பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் அந்த நான்கு பேரிடம் இருந்து தப்பி ஓடி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்கு சென்று உதவி கேட்டுள்ளார். அதனை கண்ட அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த நான்கு பேரில் மூன்று பேர் தப்பிவிட்ட நிலையில், ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த தனது கணவரை அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மீட்ட அந்த பெண் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே தனக்கு நடந்த கொடூர சம்பவம் காரணமாக அந்த பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN