Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகள் இயங்கி வருகிறது.
சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டில்லியில் இலக்கிய அமைப்பின் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, விருது பெறுபவர்கள் குறி்த்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ இருந்தது.
ஆனால் பண்பாட்டு அமைச்சகம் சார்பில் வந்த உத்தரவில்,
'2025-26 ஆம் ஆண்டிற்காக அகாடமிகளுக்கும் அமைச்சகத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விருதுகளை மறுசீரமைக்கும் பணி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட வேண்டும் .
'மறுசீரமைப்பு செயல்முறை அமைச்சகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும் வரை, அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் விருதுகளை அறிவிக்கும் எந்தவொரு செயல்முறையும் மேற்கொள்ளக்கூடாது.
என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM