Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
பேராசிரியர் க.அன்பழகனின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 19) மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!
என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b