Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டது.
அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டது. செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். மேலும், மசோதா நகலை எதிர்க்கட்சி எம்பிக்கள் கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்திய இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்ட மசோதாவை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, பார்லி வளாகத்தில் திரிணமுல் எம்பிக்கள் நேற்று இரவு 12 மணிநேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிணமுல் காங்கிரஸின் ராஜ்யசபா துணை தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில்,
'இது இந்திய ஏழைகள், மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூரை அவமதிக்கும் செயலாகும். வெறும் 5 மணி நேர முன்னறிவிப்போடு, இந்த மசோதா எங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
சரியான விவாதத்தையும் நடத்த அனுமதிக்கப்படவில்லை இது போன்ற முக்கிய மசோதா தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும், எதிர்க்கட்சிகளால் ஆராயப்பட வேண்டும், எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் விவாதிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சர்வாதிகாரத்தால் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.
எனக் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM