Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன்(டிசம்பர் 19) நிறைவடையும் நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை இன்று காலை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
திமுக குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி இன்று (டிசம்பர் 19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. மக்களுக்கு எதிரான மசோதாக்களை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.
எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் இல்லை. எந்தவித விவாதமும் இன்றி ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
மாநிலங்களை தொடர்ந்து பலவீனப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுகிறது. நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது. காப்பீட்டுத்துறையில் 100 சதவீத நேரடி அந்திய முதலீட்டை அனுமதித்துவிட்டனர். நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் யாரையும் ஒன்றிய பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை.
100 நாள் வேலை திட்டத்தின் பெயரையே மாற்றி விட்டனர். விடுதலைக்காக போராடிய தலைவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசுக்கு வெறுப்புதான் உள்ளது. நாடாளுமன்றத்தின் முகப்பில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலைகளை ஒதுக்குப்புறத்தில் கொண்டு போய் வைத்துவிட்டனர்.
ஒத்திவைக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்திற்கான மாற்று மசோதாவை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி வழங்கவில்லை. தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை ஒன்றிய பாஜக அரசு அவமதிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b