Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 டிசம்பர் (ஹி.ச .)
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13, 14ம் தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நிர்வாக காரணங்களால் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் தற்போது இந்த தேர்வு டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள், தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு. உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கன்னியாகுமரி அவர்களை நேரிலோ அல்லது 94435 79558 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b