Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 19 டிசம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (டிசம்பர் 19) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது இன்று (19.12.2025, வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 19.12.2025 அன்று காலை 10 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு Tamil Nadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, இந்த சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b