Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச)
சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கே நேற்று மாலை வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று
(டிச 02) சென்னைக்கு மிக அருகில் வந்து தீவிர தாழ்வு பகுதியாகவும், பிறகு தாழ்வு பகுதியாகவும் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வந்தாலும் ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தினமும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், இன்று(டிச 02) 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று காலை முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் விநியோகத்தில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தொடர் மழை பெய்தாலும் பால் விநியோகம் செய்யப்படும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b