தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! - கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) திராவிடர் கழக தலைவரும் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான ஆசிரியர் கி.வீரமணி இன்று (டிச 2) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திராவிடர்
தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! - கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

திராவிடர் கழக தலைவரும் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான ஆசிரியர் கி.வீரமணி இன்று (டிச 2) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திராவிடர் கழக தொண்டர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று (டிச 02) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்!

தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.

பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு திராவிட மாடல் நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b