சென்னை விமான நிலையத்தில் ரூ.1.45 கோடி மதிப்புடைய கஞ்சா பறிமுதல்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில
Weed Seized


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் பயணிகள் அனைவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

அப்போது, வட மாநில பயணி ஒருவரிடம் செய்த விசாரணையில் அவர் தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்தது தெரிய வந்தது. ஆனால், அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

இதில், அவரது பையில் ஏழு கருப்பு நிற பார்சல்களில் 3.42 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சா மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த துங்கத்துறை அதிகாரிகள், அவரிடமிருந்து ரூ. 1.2 கோடி மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த லயன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த வடமாநில நபரின் உடமையை சோதனை செய்தனர். இதில், அவர் ரூ. 24.3 லட்சம் மதிப்புள்ள 653 கிராம் பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியின் உடமைகளை சோதனை செய்த போது, சிவப்பு காதுகள் கொண்ட சுமார் 2,805 அபூர்வ வகை சிறிய வகை நட்சத்திர ஆமைகள் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. மேலும், முறையான அனுமதி மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் இல்லாமல் ஆமைகளை கடத்திக் கொண்டு வரப்பட்டதால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர்.

மேலும், இந்த வகை நட்சத்திர ஆமைகள் மூலம் நமது நாட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோய் கிருமி பரவும் அபாயம் இருப்பதாலும், நீர் நிலைகள் பாதிப்படையும் என்பதால், இந்த ஆமைகள் கொண்டுவரப்பட்ட விமானத்திலேயே மீண்டும் திரும்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான செலவுகளை கடத்தி வந்த நபரிடம் இருந்து வசூலித்தனர்.

இதையடுத்து, அவர் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN