2-வது நாளாக தொடரும் கனமழையால் சென்னைவாசிகள் அவதி
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) டித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுடைந்தாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று (டிச 01) முதல் கனமழையை கொடுத்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னை - மாமல்லபுரம் இட
2-வது நாளாக தொடரும் கனமழையால் சென்னைவாசிகள் அவதி


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

டித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுடைந்தாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று

(டிச 01) முதல் கனமழையை கொடுத்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னை - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் இதனால் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் கொட்டித் தீர்த்தது.

இரவிலும் தொடர்ந்த கனமழை, இன்றும் (டிச 02) இரண்டாவது நாளாக விடாமல் பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி உள்ளிட்ட பணிகளால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. சென்னையில் உள்ள சில சுரங்கப் பாதைகளில் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் வெளியேற்றி வருகின்றனர்.

மேலும், தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தால் மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.

இதனால் வேளச்சேரி, ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலங்களில் கார்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கிறது.

Hindusthan Samachar / vidya.b