Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் மழை வெள்ளநீர் இன்னும் வடியாமல் முழங்கால் அளவு தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் மோட்டார் மூலமாக மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துணை முதலமைச்சர் புறப்பட்ட பிறகு அப்பகுதிக்கு வந்த அதிமுகவின் வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளநீரில் இறங்கி நின்று கூட பார்வையிடவில்லை. வட சென்னை வளர்ச்சி நிதி என 6500 கோடி ரூ. மழைநீர் கால்வாய் பணிகளுக்காக ஒதுகப்பட்ட மக்கள் வரிப்பணம் என்ன ஆனது..?
என செய்தியாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் அங்கு மழைவெள்ள நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்த காங். கட்சியை சேர்ந்த கவுன்சிலர் டில்லி பாபுவிடம்
வடசென்னை வளர்ச்சி நிதி என்னவாயிற்று . எல்லா நிதியையும் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் செலவு செய்து விட்டீர்களா ..? மழை வெள்ளநீர் வடிய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆர்.எஸ்.ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ