கி.வீரமணியின் பொதுப் பணி தொடர்ந்து மேலும் சிறக்க எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள் -முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டத்தினை வழங்கிய திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எக்ஸ் தளத்தில் தெ
Ops


Tw


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டத்தினை வழங்கிய திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டு வருகின்ற திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழின் ஆசிரியரும், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, சமூக நீதியைக் கட்டிக் காத்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு “சமூக நீதி காத்த வீராங்கணை” என்ற பட்டத்தினை வழங்கியவரும், சமத்துவம், சகோதரத்துவம், சுயமரியாதை, மாநில சுயாட்சி ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பவருமான அய்யா கி. வீரமணி அவர்களின் 93-வது பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பொதுப் பணி தொடர்ந்து மேலும் சிறக்க எனது நல்வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ