Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.)
கோவை பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவதாஸ் என்பவரின் மகன் ராகுல் (வயது 25), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் பப்புக்குட்டி என்பவரின் மகன் அணில்ஜீத் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் L&T பைபாஸ் சாலை ஈச்சனாரி அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே அதிவேகமாக வந்த ரத்தினம் கல்லூரி பேருந்து ஓட்டுநர் அலட்சியமாகவும் வந்து இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராகுல், வலது காலில் பலத்த காயம் அடைந்து, தலையில் இருந்து அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது.
அவரை மீட்டர் அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னால அமர்ந்து இருந்த அவரது நண்பன் அனில்ஜித்தின் தலை, கைகள் மற்றும் கால்களில் ரத்தக் காயம் ஏற்பட்டு, தற்போது சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராகுலன் தந்தை சிவதாஸ் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ரத்தினம் கல்லூரி பேருந்து ஓட்டுநர் பாலமுரளி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan