Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.)
கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பாரதி நகர்,அழகு நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை, உணவகம் வெளிவரும் கழிவு நீர்களை தனியார் இடத்தில் தற்போது தேக்கி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாசான வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை அமைக்கும் பணியை தற்பொழுது தொடங்கி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கழிவு நீர்களை கொண்டு வருவதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் தனியாருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு இதனால் 10,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan