Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அதில் அவர் தெரிவித்ததாவது,
டிட்வா புயல் சென்னைக்கு அருகில் தென்கிழக்கே 40கி.மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது
நாளை காலை வரை இதே போல் விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
எண்ணூரில் 26செ.மீ பாரிமுனை 25 செ.மீஐஸ் ஹவுஸ் 20 செ.மீ மழை பெய்துள்ளது நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்புள்ளது..
டிட்வா புயல் குறித்த வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலையாளர்கள் கணித்தது தவறானது டிட்வா புயலானது ஆந்திரா நோக்கிச் செல்லும் அல்லது கேரளா நோக்கி செல்லும் என
அவர்கள் கூறிய நிலையில் சென்னைக்கு அருகிலேயே நிலைக்கொண்டுள்ளது
புயல் கரையை கடக்கும் போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது
அக்டோபர் வரை வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்
இதுவரை உயிரிழப்பு-4
கால்நடை இறப்பு-582
சென்னையில் 11 குழுக்கள் 330 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையிலுள்ளனர்
அக்டோபரில் சேதமாக பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்,
தற்பொழுது டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடு நடைபெற்று வருகிறது
ஒரு வார காலத்தில் அதற்கான இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும்
மயிலாடுத்துறை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்..
தூத்துக்குடி, தஞ்சாவூரில் தலா ஒருவர் என மொத்தம் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்
ஏரிகள் தூர்வாரவில்லை என
எடப்பாடி பழனிச்சாமி அரசியலுக்காக குற்றச்சாட்டுக்கு?
முதலமைச்சர் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவினார் அதனை விமர்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு இது அழகல்ல என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ