Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச)
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’செயலி இனி கட்டாயம்” என்று வெளியான செய்தி தவறான செய்தி என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அலை பேசி விற்பனை செய்யப்படும் போது இந்த சாஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தேவையில்லை என்று கருதுவோர் நீக்கிக் கொள்ளலாம். இந்த செயலி இருந்தால்,
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட போனை டிராக் செய்து ப்ளாக் செய்யலாம் (IMEI மூலம்).
அவரவர் பெயரில் போலியாக சிம் கார்டுகள் உள்ளனவா என்பதை கண்டு பிடிக்கலாம்.
சந்தேகத்திற்குரிய மோசடி கால் / SMS-களை புகார் செய்யலாம்.
இந்த செயலி பயன்படுத்தியதன் மூலம் இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்ட திருடப்பட்ட அலைபேசிகள் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
மோசடி கால் / சிம் மோசடி அதிகரித்துள்ள நிலையில் மிகவும் பயனுள்ள செயலி.
எதிர்க்கட்சிகள் குய்யோ முறையோ என கதறுகின்றனர். இதனால், தனியுரிமை பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர். அப்படி நடைபெற வாய்ப்பில்லை, பாதுகாப்பு தேவையில்லை என கருதினால் நீக்கிக் கொள்ளலாம்.
எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ