நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவை ஜன 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே தகவல்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 7-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை திருநெல்வேலியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்  சேவை ஜன 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே தகவல்


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 7-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை திருநெல்வேலியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

அதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து வருகிற 8-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06029) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

அதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து வருகிற 8-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரெயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ஜங்ஷன் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b