Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
முன்னாள் இந்திய கடலோர காவல் படை , முன்னாள் இந்திய கடற்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு காவல்துறையில் கடலோர பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிவிரைவுப்படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால், நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய 01.12.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள தகுதி வாய்ந்த முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீரார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி : காவல் உதவி ஆய்வாளர் (படகு தொழில்நுட்ப ஆளிநர்
ஊதியம்: ரூ.36,900 மற்றும் இதர படிகள்
பணியிடங்கள்: 10
பதவி: தலைமை காவலர் ( படகு தொழில்நுட்ப ஆளிநர்)
ஊதியம்: ரூ.20600 மற்றும் இதர படிகள்
பணியிடங்கள்: 41
தகுதியான விண்ணப்பதாரரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி உரிய ஆவணங்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குநர். கடலோர பாதுகாப்பு குழுமம். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகம். டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4
என்ற முகவரிக்கு 17.12.2025-க்குள் தபால் மூலம் அனுப்பலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாதிரி விண்ணப்ப படிவம் பின்வரும் இணையதள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b