சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் உருவான டித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் (டிச 02) கன மழை தொடர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களுக்கு செல்ல தடை


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் உருவான டித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் (டிச 02) கன மழை தொடர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், மழையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக மெரினா கடற்கரை மணல் பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.

இதனால் கடற்கரையின் சில பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை சென்னை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b