திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) திருவள்ளூருக்கு இன்று (டிச 02) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச 03) 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (
திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

திருவள்ளூருக்கு இன்று

(டிச 02) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச 03) 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச 02) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த டித்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

திருவள்ளூருக்கு

(இன்று டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்ளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b