கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிப
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. பின்னர், சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகி, சிபிஐ விசாரணை நடத்த கோரியிருந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது:

கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும்.

அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b