Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்குவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு எழுதிய (தொகுதி-4 பணிகள்) தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில், அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர்
உள்ளிட்ட பிற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 8 மற்றும் 18-ந் தேதி வரையில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டும் அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b