Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 2 டிசம்பர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் பிரமாண்டமான 'ரோடு ஷோ' (Road Show) மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடாக, கட்சித் தலைவர்கள் கடந்த நவம்பர் 26 அன்று, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை பேரணியாகச் செல்லவும், சோனாம்பாளையத்தில் வாகனத்தின் மீது ஏறி மக்கள் மத்தியில் உரையாற்றவும் அனுமதி கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அனுமதி குறித்து எந்த பதிலும் கிடைக்காததால், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் 29ஆம் தேதி டி.ஜி.பியைச் சந்திக்க சென்றார். ஆனால் டி.ஜி.பி. அன்றைய தினம் அலுவலகத்தில் இல்லாததால் சந்திப்பு நடைபெறவில்லை.
தொடர்ந்து, நேற்று மீண்டும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்ற ஆனந்த், அப்போது கூட டி.ஜி.பி. இல்லாததால் ஐ.ஜி. அஜித் குமார் சிங்லாவை சந்தித்து ரோடு ஷோக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடுஷோவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும். புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவது என்னை பொறுத்தவரை சரியானது கிடையாது என்று தோன்றுகிறது.
ஏற்கனவே கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த இழப்புக்குப் பிறகு நம்முடைய புதுச்சேரியில் இது போன்ற ரோடு சோ நடத்துவது சரியானது கிடையாது. குறிப்பாக தமிழகத்தை போன்று பெரிய விரிவான சாலைகள் புதுச்சேரிகள் கிடையாது. விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்ட பகுதி மக்கள் அதிக நடமாட்டம் காணக்கூடிய இடம்.
நெரிசல் மிக்க பகுதி. புதுச்சேரியில் ரோடு ஷோவை தவிர்த்து பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம்.
அவர் பொதுக்கூட்டம் நடத்தினால் வரவேற்க தயார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN