Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்தது, 98% முடிந்தது எனத் திமுக தலைவர்களின் கணக்கு தான் மாறுகிறதே தவிர, சென்னை வெள்ளத்தால் மிதக்கும் காட்சிகள் மாறவேயில்லை என பாஜக அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அந்தபதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியதும் சென்னை வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கிவிட்டது. மிக்ஜாம் புயல், டிட்வா புயல் என்று பெயர் மட்டும் மாறுவது போல, கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்தது, 98% முடிந்தது எனத் திமுக தலைவர்களின் கணக்கு தான் மாறுகிறதே தவிர, சென்னை வெள்ளத்தால் மிதக்கும் காட்சிகள் மாறவேயில்லை
நான்கரை ஆண்டுகளாக வெள்ள மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.4,000 கோடி செலவழித்ததாகக் கணக்கு காட்டியது @arivalayam அரசு. அந்தக் காந்தி நோட்டு என்ன ஆனது? அது என்ன கருணாநிதி கணக்கா? - என்பது புரியாத புதிராகிவிட்டது.
தனது மகனின் ஆசைக்காகக் கார் ரேஸ் நடத்த உடனடியாகக் கோடி கோடியாக செலவழித்து, துபாய்க்கு இணையாக சாலைகளைப் பளபளக்க வைத்த முதல்வர் திரு. @mkstalin வடிகால் அமைக்காமல் ஒவ்வொரு மழைக்கும் சென்னையை அம்போவெனத் தவிக்கவிட்டுவிட்டு அப்பாவென பெருமை பேசுவதெல்லாம் வெட்கக்கேடு!
தப்புக் கணக்கு காட்டுவதிலும் வெற்றுப் பெருமை தம்பட்டம் அடிப்பதிலும் திமுகவினருக்கு இருக்கும் திறமையும் அக்கறையும் ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் துளியளவும் இருந்திருந்தால், தலைநகர் இன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்காது!
வெள்ளம் வடிந்து கண்ணீரும் வற்றுவது போல கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்த தப்புக் கணக்கைக் கூடிய விரைவில் மக்களும் திருத்தி, தீர்ப்பு எழுதுவர்! இருண்ட மாடலை ஒட்டுமொத்தமாகத் தீர்த்துக் கட்டுவர் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ