Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 2 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் நாளை கார்த்திகைத் தீப பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட விருக்கிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு சுமார் 35 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் நுழைய டிசம்பர் 5 வரை தடை விதித்து போக்குவரத்துக் காவலர்கள் உத்தர விட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்று ஏதிா்பாா்க்கப்படுகிறது.
மக்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சுமார் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலை மாநகராட்சியை சுற்றி மாா்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலையில் 2 இடங்கள்), சா்வேயா் நகா் (வேட்டவலம் சாலை ஒரு இடம்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூா் சாலை 3 இடங்கள்), (மணலூா்பேட்டை சாலை ஒரு இடம்), விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை 7 இடங்கள்), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை ஒரு இடம்), அண்ணா நுழைவு வாயில் (வேலூா் சாலை ஒரு இடம்), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூா்பேட்டை சாலை ஒரு இடம்), வெளிவட்டச் சாலையில் (7 இடம்) ஆகிய 9 இடங்களில் 24 தற்காலிக பேருந்து நிலையங்களில் 2,325 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், 130 காா் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை கோயிலைச் சுற்றிலும் 50 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆம்புலன்ஸ் செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலை நகருக்குள் டிச. 5ஆம தேதி காலை வரை கனரக வாகனங்கள் எதுவும் நுழையக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN