Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 20 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய ரயில்வே அமைச்சகம், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது.
இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை ரெயில்வே வாரியம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, டிசம்பர் 29-ந்தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், ஜனவரி 5-ந்தேதிக்கு பின்னர் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகிறது.
ஜனவரி 12-ந்தேதிக்கு பிறகு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உண்மையான பயனாளர்களுக்கு ரெயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் மூலம் கணக்குகள் சரிபார்க்கப்படும்போது, ஒரு நபர் அதிகபட்சம் எத்தனை டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முடியும் என்பதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தாண்ட முடியாது. இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு எளிதில் டிக்கெட் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
Hindusthan Samachar / vidya.b