அசாமில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி - 5 பெட்டிகள் தடம்புரண்டன!
ஹோஜாய், 20 டிசம்பர் (ஹி.ச.) அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில், இன்று அதிகாலை நேரத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. ரயில் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது. புதுடெல்லி சென்று கொண்டிருந்த
அசாமில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி - 5 பெட்டிகள் தடம்புரண்டன!


ஹோஜாய், 20 டிசம்பர் (ஹி.ச.)

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில், இன்று அதிகாலை நேரத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. ரயில் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி சென்று கொண்டிருந்த ராஜ்தானி விரைவு ரயிலின் என்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து வடகிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் கூறுகையில் விபத்து இன்று அதிகாலை 2.17க்கு நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ரயில் ஓட்டுநர், யானைகள் கூட்டத்தைப் பார்த்ததும் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தியிருக்கிறார். ஆனாலும் யானைகள் மீது ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின.

ரயிலின் வேகத்தை குறைத்து பிரேக் போட்டிருப்பதால், மிகப்பெரிய சேதம் ஏற்படாமல், பெட்டிகள் தடம் புரண்டு நின்றன.

பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவ பகுதியில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM