Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச)
தமிழக பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (டிசம்பர் 20)சென்னை வந்தடைந்தார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் ஏராளமான பாஜவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜக தேசிய செயல் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழகம் வருகை தந்துள்ள நிதின் நபின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எஸ்ஐஆர் வந்து பல வருடமாக நடக்கவில்லை. அதாவது பல இறந்து போன வாக்காளர்கள் இருந்து இருக்கிறார்கள் அல்லது இரட்டை இடத்தில் வாக்காளர்களாக இருந்து இருக்கிறார்கள்.
அதை எல்லாம் சரி செய்யும் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.
அதை தான் செய்து இருக்கிறார்கள். உண்மையாக சொல்ல போனால், இந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் விருப்பம்.
அரசியலுக்காக தான் அதனை திமுகவினர் எதிர்த்தார்கள். எஸ்ஐஆர் பணி தேவை என்று அனைவருக்கும் தெரியும்.
பார்லியில் விவாதங்களில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டதை நாம் பார்த்தோம்.
எஸ்ஐஆர் என்பது இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்களை நீக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட, அதை தான் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b