ஆன்லைன் யூசர்களை எச்சரிக்கும் விதமாக மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய எச்சரிக்கையின்படி, டிஜிட்டல் தளங்கள் (Intermediaries) அரசு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும். இந்தியாவின் டேட்டா பொறுப்புடை
ஆன்லைன் யூசர்களை எச்சரிக்கும் விதமாக மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய எச்சரிக்கையின்படி, டிஜிட்டல் தளங்கள் (Intermediaries) அரசு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்.

இந்தியாவின் டேட்டா பொறுப்புடைமை (Data Accountability) மற்றும் தேசிய பாதுகாப்புத் தரங்களை உயர்த்துவதற்கான மத்திய அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கை ஆகும்.

அரசு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறும் நிறுவனங்கள் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act)-ன் பிரிவு 79-ன் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் கவசம் (Safe-Harbour Protections) இழக்க நேரிடும்.

பொதுவாக, இந்த விதி மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கத்திற்காக டிஜிட்டல் தளங்களை (Intermediaries) சட்டப் பொறுப்பிலிருந்து பாதுகாக்கிறது. இந்தச் சலுகை ரத்து செய்யப்பட்டால், அந்தத் தளங்கள், மூன்றாம் தரப்பு கன்டென்டுகளுக்காகவும் பொறுப்பேற்க நேரிடும். பிரிவு 79 பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட டிஜிட்டல் தளங்கள் பின்வரும் சட்டங்களின் கீழ் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் உள்ள விளைவுகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பாகும்.

புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் கீழும், அதாவது இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக வந்த சட்டத்திற்கு அவை பொறுப்பேற்க நேரிடும்.

இதற்கு முன்னர், 2022ல், இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In), VPN சேவை வழங்குநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் சரிபார்க்கப்பட்ட தகவல் பதிவுகளை ஐந்து ஆண்டுகளுக்குச் சேகரித்துச் சேமிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கட்டளையைப் பிறப்பித்தது.

இந்தக் கட்டளையின் காரணமாக, ExpressVPN மற்றும் NordVPN உள்ளிட்ட பல பெரிய உலகளாவிய VPN நிறுவனங்கள், இந்தியாவில் இருந்த தங்கள் சர்வர்களை அகற்றிக்கொண்டன. இதனால், விபிஎன் பயன்படுத்துவது என்பது இந்தியாவில் இனி ஈஸி கிடையாது. விரைவில் கடுமையான விதிமுறை அமலாக்கங்கள் வரப்போகிறது.

இந்தியாவில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், அவை எந்த வகையான செயல்பாட்டு மாதிரியைக் கொண்டிருந்தாலும், தேசிய தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைத் தரங்களுக்குச் செயல்ரீதியாக இணங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையானது, இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் செயல்படும் விதம் மற்றும் அவற்றின் தரவு கையாளுதல் பொறுப்பு ஆகியவற்றின் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM