தீவுத்திடலில் நடைபெறவுள்ள, 50-வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சிக்கான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச) சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள கண்காட்சிகாண டெண்டரில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஃப்ன் வேர்ல்டு ரெசார்ட்ஸ் இண்டியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது இந்நிலையில் இந்த வழக்கின் விசா
Theevuthidal


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச)

சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள கண்காட்சிகாண டெண்டரில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஃப்ன் வேர்ல்டு ரெசார்ட்ஸ் இண்டியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வரவே, முறையாக ஆய்வு செய்த பிறகே மனுதாரர் நிறுவனத்தின் டெண்டர் நிராகரிக்கப்பட்டது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிதிகளை பின்பற்றியே டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ