தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் விஜய் விமர்சிக்கிறார் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை, 20 டிசம்பர் (ஹி.ச.) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர
செந்தில் பாலாஜி


கோவை, 20 டிசம்பர் (ஹி.ச.)

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பேசும்போது :-

கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மகளிர் மாநாட்டில் ஐம்பதாயிரம் மகளிர் பயன்பட இருக்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள அதில் எவரேனும் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தகுதியானவர்களாக இருப்பின் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகளை முன்னெடுத்து உள்ளோம்.

கோயம்புத்தூரில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் ? இன்று தான் அரசியல் கட்சியினிடம் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை பார்த்த பிறகு தான் தெரிய வரும்.

குடியிருப்பு மாறியவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உடைய பெயர்களை நீக்காமல் இருந்து இருக்கலாம். இந்த பட்டியலை பார்த்து பிறகு தான் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கப்படும்.

தி.மு.க வின் கள்ள ஓட்டுக்கள் தான் ஈர்க்கப்பட்டு உள்ளது. என்று பா.ஜ.க தலைவர் தெரிவித்து உள்ளார். நேற்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள்.

மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவிப்பதை அவர்கள் அந்த பணியினை செய்து வருகிறார்கள்.

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது.

இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா?

பொதுவாக வாக்காளர் பட்டியல் என்பது நேர்மையான வாக்காளர் பட்டியலாக இருக்க வேண்டும்.

தி.மு.க வை தீய சக்தி என்ற விஜய் பேசி உள்ளார். நான் ஏற்கனவே பலமுறை சொல்லி உள்ளேன். தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு சூழல் இருக்கிறது.

தி.மு.க வை குறை சொல்லி ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இந்தியாவிற்கு வழிகாட்டுக் கூடிய முதலமைச்சராக மாநிலத் தமிழர் முதலமைச்சராக இருக்கிறார். அரசுக்கு ஆலோசனை செல்லக் கூடிய கருத்துக்களாக இருந்தால், நிச்சயம் நாங்கள் ஏற்போம். மக்களுக்கான அரசியல் அடுத்து உள்ள யாருடைய விமர்சனங்களும் நாங்கள் ஏற்று சரியாக நடக்கவும், நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கிறது இல்லை. மக்களுடன், மக்களாக மக்களுக்கான திட்டங்களை சேர்ப்பதாக நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கான பலம் தேர்தல் களத்தில் பணியாற்றுவது.

தைப் பொங்கல் வருகிறது பொங்கல் பரிசுத் தொகை ? முதலமைச்சர் தெரிவிப்பார்கள்.

கோவை தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறாரா ?

சமூக ஊடகங்கள் தான் அது போன்ற தகவலை தெரிவித்து உள்ளனர்.

சமூகவலைகள் யாரோ? ஒருவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பத்து தொகுதியில் ஜெயிக்க வேண்டும் அதுவே எங்கள் முதல் முயற்சி.

வரும் 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் மாநாட்டிற்கு வருகிறார்.

தமிழகத் தொடர்ந்து 4 ம் இடத்தில் முதலாவதாக கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

பி.ஜே.பி யும், காங்கிரஸும் இருந்த போது அதன் கடன் தொகை எவ்வளவு?

முதலமைச்சர் திருப்பூர் வாழும் பொழுது கருப்புக்கொடி காட்டப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஒருத்தரை புகழ்ந்துவதாலையோ ? அவர்களை முதலமைச்சராக விட முடியாது.

மக்கள் தான் யார் ? முதலமைச்சரை என்பது தீர்மானிக்க முடியும்.

பி.ஜே.பி அரசாங்கம் ஏதாவது ஒரு திட்டத்தை கோவைக்கு என்று சிறப்பு திட்டத்தை ஒரு திட்டத்தை செய்து உள்ளதா ?.... அதற்குப் பிறகு தமிழக அரசு என்னென்ன திட்டங்களை கோவைக்கு செய்து உள்ளது என்பதை பட்டியலிடுவோம்.

விளையாட்டு மற்றும் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி கொடுக்காது என்றார்.

Hindusthan Samachar / Durai.J