Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதுச்சேரி களைக்கட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு
பல்வேறு நிறுவனங்கள் புதிதாக விதவிதமான ஆடைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.
இதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு அலங்கார போட்டிகளும்
நடத்தப்படுகிறது.
அதன்படி மிஷன் வீதியில் உள்ள கசாபிளாங்கா நிறுவனத்தில் கண்கவர் பேஷன் ஷோ
நடைபெற்றது.
இந்த பேஷன் ஷோவில் ஆரோவில் மற்றும் உள்ளூரில் புதிதாக
தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், ரசாயனம் இல்லாத உடைகள் உள்ளிட்ட நவீன கலாச்சார
உடைகளை
இளம் பெண்களும், இளைஞர்களும் அணிந்து வந்து ஒய்யார நடை போட்டனர்.
அதேபோன்று
புதிய அணிகலன்களையும் அணிந்து கொண்டும், கைகளில் பிடித்தபடியும் நடந்தனர்.
அவர்களின் இந்த ஒய்யார நடை வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் என பலரும் கண்டு
ரசித்தனர்.
அவர்கள் அணிந்து வந்த ஆடைகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த போஷன் ஷோவில் முழுக்க உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam