கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் - மீனவரை மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை!
ராமேஸ்வரம், 20 டிசம்பர் (ஹி.ச.) ராமேஸ்வரம் அடுத்த சிவகாமிநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற மீனவர் நேற்று ( டிசம்பர் 19) விசைப்படகில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கடலில் விழுந்து மாயமானார். இதனை அடுத்து காணாமல் போன மீனவரை மீ
மீனவர்கள்


ராமேஸ்வரம், 20 டிசம்பர் (ஹி.ச.)

ராமேஸ்வரம் அடுத்த சிவகாமிநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற மீனவர் நேற்று ( டிசம்பர் 19)

விசைப்படகில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கடலில் விழுந்து

மாயமானார்.

இதனை அடுத்து காணாமல் போன மீனவரை மீட்டுக் கொடுக்கும் வரை மீன்பிடிப்பதற்கான

அனுமதி சீட்டு வழங்கக் கூடாது என வலியுறுத்தி காணாமல் போன மீனவர்

குடும்பத்தினரை மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் டோக்கன் அலுவலக நுழைவாயில்

அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மீனவர் குடும்பம் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் காண்போரை கண் கலங்க

வைக்கின்றது.

Hindusthan Samachar / GOKILA arumugam